கத கேளு ! தல தீவாளி கத கேளு !!
எப்பவுமே கோவிலுக்கு போற வழியில கார்டு போட்டு பணம் எடுக்கறது வழக்கம். எதோ அர்ச்சனைக்கு($12), சாமி தட்ல போட, கடசிக்கு கேண்டீன்ல பூரி சாப்பிடவாச்சும் வேணும்னு. தீவாளி அன்னிக்கு மட்டும் இந்த கூட்டத்துல என்ன அர்ச்சன செய்ய போறம்னு பணம் எடுக்கல. அன்னதானம் இருக்கு, அதனால கேண்டீன் செலவு இல்ல. அதோட தட்ல போட ஒரு $4 கைல இருக்கு. போதும்னு விட்டாச்சு.
ஆனா கோயில் வாசல்லயே ஒரு கருப்பு குச்சான் நிறுத்திட்டாரு. பத்து டாலர் குடுன்றான். நம்ம ஊட்டுக்காரர் என்னனா அங்க இருக்கற ஹிந்திகார(ர்)கிட்ட, கேட்கறார். ஹிந்தில கேட்டா மாத்திரம் என்ன வித்தியாசம்? அதே பதில்தான். காசில்லன்னா யாரும் பரவால்லன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா அதுதான் இல்ல. சரி எங்க கிட்ட காசில்லன்னு வண்டிய திருப்பிட்டோம். 5மைல் ரிவர்சல வந்து கார்டு போடலாம்னு நிறுத்தினப்புறம்தான் தெரியுது. டெபிட் கார்டு தவறி வீட்ல இருக்குன்னு. சரி, இனி என்ன பண்ண?? வெள்ள சாமியத்தான் பாப்பம்னு அங்க கெளம்பி போனா, ஏழு மணிக்குத்தான் இங்க பூஜயாம், இப்போதான் வெளக்குக்கு எண்ண பத்தாம வாங்கியார ஆள் போயிருக்கு. இருக்கற எண்ணய ஊத்தி அலங்காரம் பண்ண கொஞ்ச நேரம் ஒதவி செஞ்சுட்டு இனி அடுத்த ஒருமண்நேரத்திக்கு என்ன பண்றதுன்னு தெரியாம வீடு கெளம்பி வந்தோம். ஆக மொத்தம் ரெண்டு கோயிலுக்கு போயும் ஒரு தீபாரதன கூட பாக்கல.
1. மொத கோயிலுக்கு வெப்சைட்ல இருக்கற ஃபலையர் எல்லாம் பாத்தும் ஒரு ப்ரெயோசனமும் இல்ல. .ஃபலையர்ல பத்து டாலர் சமாச்சாரம் போடல. (ஒரே கோவங்கோவமா வந்துச்சு, யார கோவிச்சுக்க??)