Wednesday, October 11, 2006

மாறாதது மாற்றம் மட்டுமே !!!

சமீபத்தில் பார்த்த சன் டி.வி நிகழ்ச்சிகள் என்னை இந்த மாதிரி யோசிக்க வைத்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த மன்னர் ஆட்சிக்கும் இன்றைய நாட்டு நிலவரத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா???

1. மன்னர் அரசவைக்கு வருகிறார். ம் ! ஆரம்பமாகட்டும், என்றதும் பட்டாடை உடுத்திய அழகு நங்கையர் சிலர் வந்து நாட்டியம் ஆடினார்கள். அன்றெல்லாம் எவ்வளவு பேர் ஆடினார்கள் என்று தெரியவில்லை. இன்று திகட்ட திகட்ட எல்லா ரகத்திலும் வந்து ஆடுகிறார்கள்.

2. அன்றும், இன்றும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களே ஆட்சியை தொடருவதை அரசு விரும்புகிறது !

3. வெகு சில மன்னர்களே ஒரே மனைவியோடு வாழ்ந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் அந்தபுரத்தை நிரப்பியிருந்தார்கள். இருந்தாலும் official-யாக ஒரு அரசியாரே அரசவைக்கும் மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவார். இன்றும் அதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உண்டு. ஆனாலும் மனைவியார், துணைவியார் என்று பல பெயர்களோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

எல்லா மனைவியின் பேரன் பேத்திகளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ஆனால் மறக்காமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி தனி சுழலும் கேமிராக்கள் வைத்து அனைவருக்கும் ஒரே screen time குடுக்க வேண்டும்.

4. மன்னர் இறந்தவுடன் அன்றைய கலைஞர்களை கொண்டு சிலை வைத்தார்கள். இலக்கியம் சமைத்தார்கள்.

இன்று இருக்கும் மன்னர்களோ, மேலே சொன்னது போல், அநேக சுகங்களுடன் நல்லாட்சி செய்து மக்களுக்காக(!) நல்வழி அறிவுறைகள் ஆயிரம் தந்து சென்றமைக்காக, அவர்களுடைய வாழ்க்கை வரலாறை சினிமா எடுக்கிறார்கள். அதற்கு அரசே மானியத் தொகையும் தந்து, அந்த படத்தில் அவருடைய இரண்டாவது மனைவியாக யார் நடிப்பது என்ற சர்ச்சைக்கு, அவர்களது தொண்டர்களை வைத்து மறைமுகமாக நான்கு அறிக்கையும் விடுகிறார்கள்.

5. மூன்றாவது மனைவியான கைகேயி, தன் மகனே நாடாள வேண்டும் என்று பல சூழ்ச்சிகள் செய்து பரதனுக்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்க, அவனோ அண்ணனின் பாதணியை வைத்து அரசாள்கிறான். பின்னர் climax-ல் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள்.

இப்போது கலிகாலம். அதனால் ஆணுக்கு பெண் சமம். வேறு ஒன்றும் வித்தியாசமில்லை.

அப்பா பிரதமர்க்கு ஏகப்பட்ட girlfriends. அந்த இடையராத பணியிலும் மகளை பிரதமராக்க தவறவில்லை. அப்பாக்கு தப்பாத இளவரசியும், கணவருடன் ஒரு குழந்தை, boyfriend-உடன் இரண்டாவது குழந்தை என்று பெற்றெடுக்கிறார். ஆனாலும் ஒன்று மட்டும் மாறவில்லை. பழைய ராஜா காலத்து கதையை போலவே, முதல் தாரத்தின் (இங்கே boyfriend என்று படிக்கவும்) மகனே நாடாள்கிறான். Source

6. ராஜபாட்டை போன்று இன்றும் சாலைகள் மண்ணில்தான் இருக்கின்றன. ஆனால் கொஞ்சம் குழிகள்தான் அதிகமாக இருக்கிறது. ராஜபாட்டையில் வீதியெங்கும் வெளிச்சமாக உயரத்தில் தீப்பந்தங்கள் வைத்து அதற்க்கு தினமும் எண்ணையும் விட்டு பிரகாசித்தார்கள்.

இன்று, முதல் முறை விளக்கு வைப்பதோடு சரி. பின்னர் அது ஊத்திக்கொண்டால் அடுத்து அரசர் வீதிஉலா போகும் செய்தி வந்தால் மட்டுமே சரி செய்யபடும். அதற்கு சில(5) வருடங்கள் கூட ஆகலாம்.

7. பரிசுக்காக அரசரை வாழிய ! வாழிய! என்று புகழ்ந்து பாடினார்கள். வரிவிலக்குக்காக புகழ்கிறார்கள். இரண்டுக்கும் காரணம் அதே பணம்தான்.

8. போரில் தோற்ற அரசர் வீரமரணம் அடைய விரும்புவார். இல்லைனா சிறை உறுதி. Election-ல தோத்தாலும் சிறை உறுதி !

9. மன்னர்களுக்கு கலைதாகம் அதிகம். சிலை வடித்தார்கள். கோவில் கட்டினார்கள். கலைஞர்களை ஊக்குவித்தார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கலைதாகம் அதிகம்(& viceversa too). பிரச்சாரத்துக்கு கலைஞர்கள் தேவை என்று அவர்களை ஊக்குவிக்கிறார்கள் !

3 Comments:

Blogger Jeevan said...

:) Let see the End.

October 15, 2006 9:41 AM  
Blogger மனசு... said...

நல்ல உவமை... அடுத்த பதிவு எப்போ போடுவிங்க????

அன்புடன்,
மனசு...

October 16, 2006 8:52 AM  
Blogger aruna said...

மனசாரே வருக! ரொம்ப தாக்கி எழுதிட்டன்னு கொஞ்ச பேர் சொல்றாங்க. அதான் இதோட நிறுத்திரலாமான்னு யோசிட்டு இருக்கேன் ! எதுக்கும் பொறுத்திருந்து பாருங்க !!

October 18, 2006 11:31 AM  

Post a Comment

<< Home