Jai Jaganaath..
..Jai jaganath swamy..Jai janganath...Jai balaram..Jai subathra...
இப்படிதான் போனது என் சனிக்கிழமை. "தேரில் இருக்கும் ஜகன்னாதரை ஒருமுறை பார்த்து வடம் பற்றி தேர் இழுத்தால் அடுத்த ஏழு ஜென்மத்திக்கும் புண்ணியம் உண்டு" என்று அழைப்பிதழ்கள் வீட்டிக்கு பல முறை வந்தது. சரி போகலாம் என்று முடிவாயிற்று.
1. எண்ணி மூன்று இந்தியர்கள் தவிற அனைத்து மகளிரும் cleavageதெரிய உடை அணிந்து இருந்தனர்.(அந்த மூவரில் ஒருவர் நான். ஹி!ஹி!).
9.படத்தில் பார்க்கும் காவி அணிந்து முண்டாசு கட்டி இருப்பவர், கட்டை செருப்பு அணிந்து இருந்தார். (இன்னைக்கு மட்டும்தானா? )
ஆக மொத்தம் அங்கே, odd man out போல் நாங்கள் தெளிவாக தெரிந்தோம். ஸ்ரீலங்கா, இந்தோனெசியா, மலையா, மற்றும் உள்ள தீவுகள் இருந்த முக ஜாடையே அதிகம். அல்லது இங்கே வந்து குடி பெயர்ந்து சில தலைமுறைகள் தாண்டி முகவரி மறந்த மற்றும் சிலர்.

How is the weather? என்ற கேள்விக்கு அடுத்தபடியாக what is your weekend plan? என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள். அவர்களுக்கே என்ன செய்வோம் என்று தெரியாவிட்டாலும்
நானும் இந்த முறை எல்லோரிடமும் தேர் இழுக்க போவதாக சொல்லி வைத்தேன். ப்ரவுன் கலர் பட்டுப்புடவை கட்டலாம் என்று முடிவு செய்து அது கிடைக்காமல் போய், எங்கள் வீட்டிலும் இல்லாமல், கடைசியாக சுடிதார் போடுவதாக முடிவு செய்ய பட்டது. என் அம்மா கூட என்ன கூட்டம் வரும் என்றார். நானும் பத்திரிக்கையை பார்த்து 2000 பேர் 2 மைலுக்கு இழுப்பதாக பெருமை அடித்தேன். அம்மா ஃபோன் வைக்கும்போது, "நீங்க ரெண்டு
மறக்காம அங்க(மாமியார் வீடு) ஃபோன் பேசும்போது அந்த ப்ரவுன் கலர் பட்டுப்புடவை இருக்கானு கேட்டுக்கோ, இங்க நல்லா தேடிட்டேன் இல்ல, சரியா? " என்றார்.
கார் நிறுத்தி வெளியே வரும்போதே கவனித்தோம், அருகில் வந்த சில ஆட்கள் ஏதோ வித்தியாசமாக தெரிந்தார்கள். இந்தியர்களை போலவும் அல்லாதது போலவும் இருந்தது.
தேர் பார்க்கபோகும் என் ஆர்வக்கோளாரினால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அருகில் சென்ற பிறகு தான் ஒவ்வொன்றாக தெரிந்தது அந்த கூத்து ! அது பெரும்பாலும் ISCKON மக்கள் நடத்தும் விழா. இது புரியும் போது ஏற்கனவே 1 மணி நேரம் அவுட்.
சரி Highlights என்ன?

2. இந்தியர் அல்லாது மற்ற மகளிர் அனைவரும் சேலையில் இருந்தனர்.
3. நடிகை ஹீரா போலவே உள்ள ஒருவர், என்னை மிகவும் கவர்ந்தார். (தமிழ் படத்தில் நடிப்பாரா என்று தெரியவில்லை.)
4. தலைமை குரு ஒரு அமெரிக்கர்.
5. பஜனை செய்தவரும் ஒரு வெள்ளைக்காரர் தான். குடுமி வைத்திருந்தார்.
6. எல்லோரும், சாமியாரை பார்த்தால் படீர், படீர் என்று காலில் விழுகிறார்கள், அதுவும் சாஷ்டாங்கமாக. (இதே ஃளாட்ஃபார்மில் மழை பெய்து ஈரமாய் இருந்தாலும் இப்படி தரை தொட்டு விழுவார்களா?)
7.என்ன முறை மாறி இருந்தாலும், ஒரு கலாச்சாரம் மாறவில்லை. 3.30க்கு ஆரம்பிப்பதாக சொல்லி, 4.30க்கு ஆரம்பித்தார்கள்.

10. நிறைய பேர் கழுத்தில் ஒரு பை கட்டியிருந்தார்கள்(உள்ள பசிக்கு முருக்கு ஏதாவது இருக்குமோ ?)

கொஞ்ச நேரம் அங்கே சேர்ந்து இருந்தால் எங்களுக்கும் மறை கழன்று விடும் என்று தோன்றியதால் தேர் இழுப்பதற்க்கு முன்னறே நடையை கட்டினோம்.
நாங்கள் கார் ஏறிய அடுத்த பத்து நிமிடத்தில் நல்ல மழை பெய்தது !
3 Comments:
Kavi aninthaa sami enna kondu varar kaiel (ladduva illai pizzava)?
appa ora thamasa thaan irunthirukkum:) Nice photo's.
hahahaha laughed aloud.. did u learn tamil typing or how is this tamil blog..nice..and i could imagine the show there :))
barbie: I use e-kalappai to type tamil & its not difficult..
Post a Comment
<< Home