Wednesday, February 08, 2006

ye he indian style !!

University-ல் படிக்கும் போது நடந்த சம்பவம்.

எங்கள் research group-ல் P.hd முடித்துவிட்டு முழு நேர ஆராய்ச்சியாரளாக இருந்த ருஷ்யர் ஒருவரின் மனைவி தனக்கும் ஒரு வேலை போட்டுத்தரும்படி கேட்க, பத்தாவது மட்டுமே படித்திருந்தால் அவருக்கு technician என்கிற பேரில் ஒரு வேலை தரப்பட்டது. இதற்கு முன்னரே சில party-யில் சந்தித்திருக்கிறோமாதலால், என்னுடன் சீக்கிரமே ஒட்டிக்கொண்டார். Lab விஷயத்தில் இருந்து, என் குடும்ப விஷயம் வரை ஏன்? ஏன்? என்று கேள்விகள் கேட்கும் ஒரு அன்புத்தொல்லை அவர். சமையல், சங்கடம் என்று ஆரம்பித்து, நேற்று இரவு அவர் கனவில் வந்த முதல் காதலன் வரை என்னுடன் பேசித்தீர்ப்பார். சில சமையங்களில் அவர் என் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்கிறார் என்று நான் மனதிற்குள் வருத்தப்பட்டாலும், அவருடைய குழந்தை போல் உள்ள மனதினால் எங்கள் நட்பு தொடர்ந்தது .

ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஏதோ அவசரமாக நான் போகும் போது, அவர் அரைகுறை மேல்சட்டையுடன் என் எதிரில் வர ...இந்த ஊர் பாஷையிலே சொல்லணும்னா, i started freaking out..என்ன சட்டை இது. இரண்டு குழந்த இருக்கு உனக்கு மறந்திடிச்சா? உன் வீட்டுக்காரர் மானம்தான் போகும் என்கிற ரீதியாக நான் பேசிக்கொண்டே போக.....கேட்கும் அவருக்கு 35 வயது. பெரிய மகன் படிப்பது ஏழாவது. இரண்டு பொத்தானுக்கு கீழ் அவர் சட்டை, டெல்டா வடிவமெடுத்து, அந்த விவகாரமான புள்ளியோடு சேர்த்து முன்பகுதி முழுக்க தெரிந்ததே இதற்கு காரணம். அவரும் சிம்ரன் போல் இல்லாமல், நயன்தாரா அக்கா போல் இருந்தது அதிக கஷ்டம்.

இத்தனைக்கும் சேர்த்து அவர் சொன்ன பதில்தான் இந்த பதிவு எழுத காரணம். அருணா வேற யாராவது இப்படி சொல்லியிருந்தா, பரவாயில்ல, நீ இப்படி சொல்லுவேன்னு எதிர் பார்க்கலே...???!! ....என்னடா இது ஏதாவது செண்டியா பேசிப்புட்டமா? என்று...யோசிக்கும்போது அவ சொன்னா பாருங்க!! ....நான் இன்னைக்கு indian style-ல...dress பண்ணிட்டு வந்து உன்னை அசத்தனும்னு பாத்தா...நீ இப்படி சொல்லிட்டியே!! (அடப்பாவி !!)

நான் இதற்கு பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் ங்கே!! என்று விழிக்க....கடைசியில் நான்அவரிடம் 'சினிமாவிலும், modelling-ம் வருவதோடு சரி....மத்தபடி தினமும் நாங்க இப்படி சுத்தறது இல்ல' என்று ஒருவாராக சமாளித்தேன். எல்லாம் சினிமா படுத்தும் பாடு!! அவர் குடும்பத்தில் அனைவரும் தர்மேந்திரா விசிறிகள். இவருக்கு கூட "சீதா கீதா" கதை வசனம் எல்லாம் அத்துப்படி.....நல்லவேலை அவர் சமீபத்திய ஹிந்தி படங்கள் எதுவும் பார்த்திருக்கவில்லை....இல்லைன்னா யப்பா எனக்கு நெச்சு பாக்கவே பயமாகீது !!

Incident happened sometime during early 2004

4 Comments:

Anonymous Anonymous said...

OMG !! Thats scary !!
Avangaluku oru saree katta solli thaanga !!

February 08, 2006 9:44 PM  
Anonymous Anonymous said...

here too I have a office friend from Nigeria who is a fan of 80's hindi movies.He says Hindi movies were more popular that time than their local language movies. He knows more about me on Hindi hero's. Luckly he is a guy and he likes all those heroines :))

February 09, 2006 9:20 AM  
Blogger P.R.A.D said...

Unagala TAG pannirukaen.. Check My Blog

February 11, 2006 4:56 AM  
Anonymous Anonymous said...

Recenta kooda namma tamizh naatula maha flop aana oru maadhavan sadha padam south africala mega hitaama..

andha padatha kooda remake panni avanga language tulula potu padam record hitnu kaelvipataen

March 08, 2006 12:07 PM  

Post a Comment

<< Home